Skip to main content

மத்திய அரசுக்கு திவ்யா சத்யராஜ் வைத்த கோரிக்கை!

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

dhivya sathyaraj

 

கடந்த ஒருமாத காலமாக இந்தியாவில் வேகமெடுத்துவந்த கரோனா இரண்டாம் அலையின் தாக்கம், அரசு விதித்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையடுத்து, மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசி குறித்து நிலவும் குழப்பான கருத்துகளால் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவதில் தயக்கம் காட்டிவருகின்றனர். இந்தச் சூழலில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் தேவையை மக்களிடம் கொண்டு செல்ல மருத்துவர்களும் மருத்துவமனையும் உரிய முயற்சி எடுக்க வேண்டுமென்றும், அது அவர்களின் அடிப்படை கடமை என்றும் ஊட்டச்சத்து நிபுணரும் மகிழ்மதி இயக்கத்தின் நிறுவனருமான திவ்யா சத்யராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

 

கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலம் முதலே இந்த விவகாரத்தில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துவரும் திவ்யா சத்யராஜ், தற்போது ஜி.எஸ்.டி விவகாரம் தொடர்பாக மத்திய அரசிற்கு கோரிக்கை ஒன்றும் வைத்துள்ளார். இது குறித்து தன்னுடைய மகிழ்மதி இயக்கத்தின் சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா சிகிச்சைக்கு பயன்படும் "மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க வேண்டும்" எனக் கேட்டுகொண்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும்” - திவ்யா சத்யராஜ் வேண்டுகோள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
divya sathyaraj about hospital video

சத்யராஜின் மகளான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார். தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சேவை செய்யும் இவர், தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.  

இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு, நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளார். அதில், “இத்தகவல் என்னுடைய மருத்துவ நண்பர்களிடமிருந்து வந்தது தான். சில தனியார் மருத்துவமனைகளில் அந்த மருத்துவமனைக்கு லாபம் வருவதற்காக நோயாளிகளுக்கு தேவையில்லாத ரத்த பரிசோதனை, தேவையில்லாத ஸ்கேன்ஸ், தேவையில்லாத எம்.ஆர்.ஐ, இதையெல்லாம் பண்ண வைக்கிறாங்க. ஒரு நோயாளி குணமானதுக்கு அப்புறமும் ஒரு ரெண்டு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதுக்கப்புறம் டிஸ்சார்ஜ் பண்றாங்க. 

தனியார் மருத்துவமனைக்கு போனால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை விட பணம் காலியாகும் என்ற பயம் தான் நோயாளிகளுக்கு அதிகமா இருக்கு. எங்க அமைப்பு மூலமா சில நோயாளிகளுக்கு உதவி செஞ்சாலும், எல்லா நோயாளிகளுக்கும் உதவி செய்வது யதார்த்தத்தில் முடியாத ஒரு விஷயம். நோயாளிகளை வருவாய் உருவாக்கும் எந்திரமாக அணுகக்கூடாது. அவர்கள் அப்படி கிடையாது. தனியார் மருத்துவமனை வைத்து இருப்பவர்கள் நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என பேசியுள்ளார்.

Next Story

சனாதன சர்ச்சை; கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்த திவ்யா சத்யராஜ் 

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Divya Sathyaraj retorts to Kasturi on the Sanatana issue

 

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி பேசுகையில், ‘சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று நீங்கள் போட்டுள்ளீர்கள். சிலவற்றை ஒழிக்கத்தான் வேண்டும் எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும்.’ எனப் பேசினார். இதற்கு எதிராக நடிகை கஸ்தூரி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், “டெங்கு, மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றியுள்ளது. அவர்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்குத்தான் உபதேசம் இவர்களுக்கு இல்லை. சனாதனத்தின் மேல் அவ்வளவு வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்த கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? முதல்ல உண்டியலிலிருந்து கைய எடுங்க” எனக் கூறி இருந்தார்.

 

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, சனாதனத்தைப் பற்றிப் பேசியதற்கும் உதயநிதியைப் பற்றிப் பேசியதற்கும் திவ்யா சத்யராஜ் எதிர்வினை ஆற்றியுள்ளார். அதில், “கஸ்தூரி, அமைச்சர் உதயநிதியையும் அவர் பேசிய சனாதனத்தையும் பேச என்ன தகுதி இருக்கிறது. இவர் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு எது? இவர் பேசிய பேச்சு முழுமையாக ஒரு மத வெறியர் போல் தெரிகிறது. இந்த பிற்போக்கான செயல் பெண்களுக்கு இவர் செய்யும் துரோகம். சனாதனத்தால் பெண் உரிமை பறிக்கப்படுகிறது. ஒருவரை உயர்ந்தவர் மற்றொருவர் தாழ்ந்தவர் என்பதை கட்டமைத்த இந்த பாகுபாடுதான் சனாதனம். ஆகையால் சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் எதிரான இந்த சனாதனத்தை நான் முழுமையாக எதிர்க்கிறேன். கஸ்தூரி பேசிய பேச்சு முற்றிலும் தவறானது. நீதியின் பக்கம் நிற்க வேண்டுமே தவிர சாதியின் பக்கம் அல்ல. அவர் இதுபோன்று பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். 

 

சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இந்தியாவில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். மணிப்பூரில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக ஐஎஸ்ஓ சான்றளிக்கப்பட்ட என்ஜிஓவுடன் இணைந்தும், ஈழத் தமிழ் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக, இலங்கையில் உள்ள அரசு நிறுவனத்துடன் கைகோர்த்தும் சமூக சேவைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.