Divya Sathyaraj questions BJP leader!

Advertisment

சத்யராஜ் மகளான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார். தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சேவை செய்யும் இவர், தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

சமூக அக்கறையுடன் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வரும் இவர், தமிழக பாஜக தலைவரிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் “மணிப்பூர் பிரச்சனையின் போது ஏன் அமைதியாக இருந்தீர்கள். கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நெரிசலான இடங்களிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்திய போது சில தலைவர்கள் ரத யாத்திரை செல்ல ஏன் முயற்சித்தார்கள்.

கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட போது வீடுகளில் விளக்கேற்றச் சொல்லி ஏன் கேட்டது. தடுப்பூசி கொள்கை பேரழிவை ஏன் ஏற்படுத்தியது.தென்னிந்தியாவில் உள்ளவர்களும் விவசாயிகள் தான், அவர்களை ஏன் புறக்கணிக்க வேண்டும்.ஒரு மதம் எப்போதும் ஏன் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.தென்னிந்தியாவில் உள்ள மாணவர்களும் மனிதர்கள் தான். அவர்களை ஏன் புறக்கணிக்க வேண்டும். குஜராத்தில் என்ன நடந்தது என்பதற்கு பதில் இல்லை” என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்