நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்துள்ளார். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், 'ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் கட்சி என்றால் அது திமுக. அதற்கு உதாரணம் முதல்வரின் காலை உணவு திட்டம். நான் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளேன். குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சி என்றால் திமுக தான். அதற்கு உதாரணம் புதுமை பெண்கள் திட்டம். எல்லா மதங்களுக்கும் மரியாதை தரும் கட்சியும் திமுக என்பதால் திமுகவில் இணைந்துள்ளேன். அப்பா என்னுடைய தோழர் என்பதால் அவர் எப்பொழுதும் எனக்கு பக்க பலமாக இருப்பார். திமுக தலைவர் என்ன பொறுப்பு கொடுக்கிறாரோ அந்த பொறுப்பில் கடுமையாக உழைப்பேன்'' என அவர் தெரிவித்துள்ளார்.