Skip to main content

திவாகரன் இல்ல திருமணம்... உறவுகள் புறக்கணிப்பு ஏன்?

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

5 வருடங்களுக்கு முன்பு அதிமுகவின் அதிகார மையமாக இருந்த மன்னார்குடி. ஜெ.வின் கோபத்தின் பார்வையில் பட்டபிறகும் கூட அதே நிலையில் இருந்தது. ஆனால் ஜெ.மறைவுக்கு பிறகு அதிகார மையம் உடைந்து சின்னாபின்னமாகிவிட்டது.
 

Divakaran Home Marriage ... Why Relationships Ignored

 

அதிகார மையத்தின் முதன்மையானவர் சசிகலா. ஜெ.மறைவுக்கு பிறகு அவரது கணவர் நடராஜன், செல்லத் தம்பி திவாகரன் ஆகியோர் சொல்லியும் கூட கேட்காமல் கட்சி, ஆட்சியை கைப்பற்றலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியே அவரை சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் ர.ர.க்களே. அந்த சந்தர்ப்பத்தில் மீண்டு எழுந்தவர் தினகரன். அவருக்கு துணையாக அவரது மச்சான் டாக்டர் வெங்கசேடன் வர அதிமுக உடைந்து தனி அணியாகி. பிறகு அமமுக என்றானது. அதுவரை தினகரனுக்கு பக்கபலமாக இருந்து தனது ஆதரவாளர்களை தனி அணியில் சேர்த்த திவாகரனுக்கும் தினகரனுக்கும் கருத்துவேறுபாடுகள் எழ..  அ.ம.மு.க என்ற கட்சியில் திராவிடம் இல்லை என்று சொல்லி அண்ணா திராவிடர் கழகத்தை உருவாக்கி கட்சிக்கு தலைவர் ஆகிவிட்டார்.

 

Divakaran Home Marriage ... Why Relationships Ignored


அ.தி.க கட்சி தொடங்கும் போது சசிகலா பெயரையும், படத்தையும் பயன்படுத்தியதால் சிறையில் இருந்த சசிகலா அந்த கட்சிக்கும் எனக்கும் தொடர்பில்லை. எங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்பது போல வழக்கறிஞர் மூலம் அறிக்கை கொடுத்தார். அதன் பிறகு திவாகரனும் சசிகலாவை தனது முன்னாள் சகோரி என்று பிரஸ்மீட் கொடுத்தார்.

தொடர்ந்து அ.தி.க – அ.ம.மு.க தனித் தனிக் கட்சியாக செயல்படத் தொடங்கியது. திவாகரனிடம் இருந்தும் அ.ம.மு.க வுக்கு போனவர்கள் அங்கேயே தங்கிவிட்டதுடன். பலர் அ.தி.மு.க வுக்கும் போய்விட்டனர். திவாகரனும் – தினகரனும் பொது இடங்களில் கடுமையான விமர்சனங்களை வைத்துக் கொண்டனர். இதனால் மேலும் குடும்பத்திற்குள் விரிசல் ஏற்பட்டுவிட்டது.  சசிகலாவின் கணவர் ம.நடராஜன் இறந்த போது அனைவரும் வந்து தனித்தனியாக கலந்து கொண்டாலும் ஒட்டிக் கொள்ளவில்லை. அதன் பிறகும் வேற்றுமை அதிகமானது.

 

Divakaran Home Marriage ... Why Relationships Ignored

 

இந்த நிலையில் திவாகரன் மகன் ஜெயானந்த்க்கு ஜெ.வின் முன்னாள் வளர்ப்பு மகனும், தினகரன் சகோதரர் பாஸ்கரன் மகள் ஜெயாஸ்ரீக்கும் திருமணம் நிச்சயக்கப் பெற்று திருமணத்திற்கு உறவுகள் அனைவரும் வரவேண்டும் என்று திவாகரன் பத்திரிக்கை கொடுத்து அழைத்திருந்தார். சசிகலாவுக்கும் அழைப்பு கொடுத்து பரோலில் வர வேண்டும் என்று அழைத்திருந்தார்.

இதை அறிந்த தினகரன்.. கடந்த மாதம் தஞ்சை எம்.பி. பழநிமாணிக்கம் தம்பி மகன் திருமணத்தில் கலந்து கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்ற ரீதியில் பேசிய வீடியோவை சசிகலாவுக்கு காட்டி அவரை பரோலில் வரவிடாமல் தடுத்ததுடன் தனது உறவுகளை அனைவரையும் வரவிடாமல் தடுத்துவிட்டார். இளவரசி மகன் விவேக் மணமகன் ஜெயானந்த் மீது பற்றுக் கொண்டவர் என்றாலும் அவரும் கலந்து கொள்ளவில்லை.அ.ம.மு.க வினரும் வரவில்லை. 

அதேபோல ம.நடராஜன் உறவுகளும் காணவில்லை. அதில் கலந்து கொண்ட ஒரே உறவு டாக்டர் வெங்கடேசன் மட்டுமே. அவருக்கும் தினகரனுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு எற்பட்ட பிணக்கு காரணமாகவே வெங்கடேசன் கலந்து கொண்டார். ஒட்டு மொத்த உறவுகளும் புறக்கணித்த போது டாக்டர் வெங்கடேசனும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த உறவுகளும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைந்தார் திவாகரன்.

 

Divakaran Home Marriage ... Why Relationships Ignored


ஆனால் தி.மு.க வினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒரத்தநாடு புல்லட் ராமச்சந்திரன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர். மேடையில் மணமக்களுடன் நின்ற புல்லட் ராமச்சந்திரன் படம் எடுங்கப்பா என்று சொல்லி புகைப்படம் எடுத்த பிறகே அங்கிருந்து அகன்றார். சமீபத்தில் அ.ம.மு.க வில் இருந்து தி.மு.க வில் இணைந்த மணமேல்குடி பரணி கார்த்திகேயன் சாப்பாட்டு பந்தல் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செய்தார். நாகை எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி, பி.ஆர்.பாண்டியன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் 9 ந் தேதி சென்னையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அதில் அ.தி.மு.கவினர் மற்றும் தி.மு.க தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.