district wise teams tn govt and special officer

Advertisment

'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்துக்காக மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு குழு அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கடிதம் எழுதியுள்ளார். அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவில் மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் உள்ளிட்டோர் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் 549 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்ட நிலையில், குழு அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.