Advertisment

உழைப்பாளிகளைப் பெருமைப்படுத்திய மாவட்ட எஸ்.பி!

 District SP who made working people proud

மனிதகுலத்திற்குத் துன்பத்தைக் கொடுத்துள்ள கரோனா வைரஸ் போரில் இந்திய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடந்து வருகிறது. அதில் அதிகாரத்திலுள்ளவர்கள் முதல்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை இந்தப் போரில் பங்கு பெற்று வருகிறார்கள். குறிப்பாக மருத்துவத் துறை ஊழியர்கள் இதனைத்தொடர்ந்து காவல் பணியாளர்கள்.

Advertisment

இதில் ஊர்காவல் படையினர் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது,இந்தியாவில் மிகவும் அபாயகரமான மாவட்டமாக அறிவிக்கப்பட்ட ஈரோட்டில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன்,ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் இணைந்த கூட்டணி, இந்த வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக மிகவும் கடுமையாகப் போராடினார்கள். பல தரப்பட்ட ஊழியர்களைப் பணியமர்த்தி அவர்கள் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்ற வைத்தார்கள்.

Advertisment

அதில் சுகாதாரத்துறை ஊழியர்கள்,அடுத்து காவல் பணியாளர்கள் என்ற அளவில் ஊர்க்காவல் படையினர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அந்த ஊர்க்காவல் படையினர் தனிமைப்படுத்த பகுதிகள், மேலும் வைரஸ் தொற்று பரவிய நபர்கள், அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் என எல்லா இடங்களிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார்கள்.

அதிகாரிகளுக்குப் பாராட்டு என்பது ஒருபுறம் இருந்தாலும் கடைநிலை ஊழியர்களைப் பாராட்ட வேண்டும் என்ற மனதோடு, ஊர் காவல் படையினரைப் பாராட்டும் விதமாக,ஈரோடு மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன் ஈரோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பணிபுரிந்த ஊர்க்காவல் படையினரை இன்று நேரில் வரவழைத்து பாராட்டுப் பத்திரம் கொடுத்ததோடு அவர்களை மிகவும் பாராட்டியுள்ளார்.

இந்த நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்ததாகவும்,எப்பொழுதுமே உழைப்புக்கு மரியாதை உண்டு என்பது இதுபோன்ற நிகழ்வில் தெரிந்து கொண்டேன் எனவும் ஊர்க்காவல் படையில்பணிபுரிந்த பெண் காவலர்களில் ஒருவரான கலைச்செல்வி கூறினார்.

corona virus Erode police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe