திருவள்ளூரில் பள்ளி விடுதியில் +2 மாணவி தற்கொலை: விரைவில் சிபிசிஐடி விசாரிக்கும் - மாவட்ட எஸ்.பி. பேட்டி

District Sp says CBCID investigate soon on  tiruvallur incident

திருத்தணி அருகேயுள்ள தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி, கீழச்சேரியில் செயல்படும் ஒரு அரசு உதவிபெறும் பள்ளி விடுதியில் தங்கி +2 படித்துவந்தார். இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு கிளம்பிய மாணவி, உடன் இருந்த மாணவர்கள் காலை உணவு அருந்தச் சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி மாணவியின் உறவினர்கள் கீழச்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் மப்பேடு காவல்துறையினர் மற்றும் மாவட்டக் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்யாண், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார். மற்ற விவரங்கள் குறித்து இப்போது பேசுவது சரியாக இருக்காது. சம்மந்தப்பட்டவர்கள் புகார் அளித்த பின் சிபிசிஐடி விசாரணையைத் தொடங்கும். நீதிமன்ற உத்தரவுப்படி நாங்கள் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது. வழக்குப் பதிவு செய்த பிறகு அதை நாங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்போம். அவர்கள் விசாரணையைத் தொடங்குவார்கள்” எனத் தெரிவித்தார்.

tiruvallur
இதையும் படியுங்கள்
Subscribe