Advertisment

விரைவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - தேமுதிக விஜயகாந்த் அறிவிப்பு 

District secretaries meeting soon - dmdk

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக அதிமுக தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தல்வரை அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்தின் தேமுதிக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது;ஒரு இடம்கூட பெறாமல் தோல்வியடைந்தது.

Advertisment

இந்நிலையில்,ஊரடங்கு காலம் முடிந்தவுடன் மாவட்டச் செயலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்த இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வெகு விரைவில் நடைபெற உள்ளது எனவும் தேமுதிக சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

meetings Dmdk vijayakanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe