Advertisment

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்; தேதியை அறிவித்த அதிமுக 

District Secretaries Meeting; AIADMK announced the date

அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் வரும் 9 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து தொகுதிகளிலும் இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதுவரை 38 தொகுதிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த நிலையில் நாளை கரூர் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கான காரணம் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கிறார்.

Advertisment

இந்நிலையில் வரும் 09/08/2024 ஆம்தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர் அனைவருக்கும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe