District Revenue Office assistant arrested!

Advertisment

ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாவட்ட வருவாய் அலுவலக உதவியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

District Revenue Office assistant arrested!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற நபர் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ரமேஷ் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி அவரது பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பான விசாரணையில் ரமேஷ் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் ரமேஷை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.