District official caught taking bribes!

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் சுப்ரமணியன் என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மஞ்சம்பட்டியில் சுமார் 13 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது விவசாய நிலத்திற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இவரது நிலத்திற்கு மின்சார கம்பி வயல் வழியாக வருகிறது. அந்த மின்சார கம்பியில் இவரது நிலத்தை ஒட்டி அமைந்துள்ள மரத்தின் கிளைகள் உரசுவதால் அதனை கடந்த 25.9.2022 அன்று மேற்படி சுப்பிரமணியன் மரத்தின் கிளைகளை வெட்டி உள்ளார்.

Advertisment

இதனை அறிந்த மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி, சுப்பிரமணியனை சந்தித்து விசாரித்துவிட்டு, இவரிடம் 30 ஆயிரம் பணம் லஞ்சமாக கொடுக்குமாறு முதலில் கேட்டு பின் பத்தாயிரமாவது கொடுக்க வேண்டும், இல்லையென்றால் காவல்துறையில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் மிரட்டியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணியன் வட்டாட்சியர் லட்சுமியின் மீது திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். சுப்பிரமணியன் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான குழுவினரின் ஆலோசனையின் பேரில் சுப்பிரமணியன் பத்தாயிரம் லஞ்சமாக தாசில்தார் லட்சுமியிடம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.

Advertisment