Advertisment

கலை சங்கமம் நிகழ்ச்சி; பறை இசைத்து தொடங்கிய மாவட்ட ஆட்சியர்!

District Collector started the Kalai Sangam program by beating the drum

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் தமிழ்நாடு கலை பண்பாட்டு இயக்கம் மற்றும் இயல், இசை நாடகம் மன்றம் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழர் திருநாள் பொங்கல் விழாவை கொண்டாடும் கலைச் சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை போற்றும் வகையில் நலிந்த பாரம்பரிய கலையை முன்னேற்றம் அடையச் செய்யும் வகையில் பறையாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம், கொக்கலிக்கட்டை, புலியாட்டம், வாளி மோட்சம், இசை நாடகம் உள்ளிட்ட பலவேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Advertisment

இதனை மாவட்ட ஆட்சியர் வளர்மதி பறை இசைத்துதுவக்கி வைத்தார். குறிப்பாக நாடக கலைஞர்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியைக் கண்டு களிக்க ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொய்க்கால் ஆட்டம் ஆடுபவர்களிடம் ஆட்சித் தலைவர் வளர்மதி நாங்கள் உண்மையான கால்களிலேயே சிறிது நேரம் கூட நிற்கவும் நடக்கவும் முடியவில்லை. இதனை கட்டிக் கொண்டு ஆடுகிறீர்களே உங்களுக்கு இது ஏதுவாக உள்ளதா பின்னர் நீங்கள் ஆடும் பொழுது உங்கள் கால்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்படுகிறதாஎன்பதை கேட்டறிந்தார்.

ranipet
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe