Advertisment

தி.மலை கிரிவலத்திற்கு தடை... மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

District Collector orders to stop Thimalai Kirivala

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தும் முடிந்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தமிழகத்தில் சில நாட்களாக கரோனா அதிகரித்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், திருவண்ணாமலையில் வரும் 28ஆம் தேதி நடைபெறவிருந்தபவுர்ணமி கிரிவலத்திற்குத் தடை விதித்துள்ளார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி. கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்குபெறுவார்கள்.கரோனா அதிகரித்து வரும் நிலையில் கிரிவலத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கரோனாதீவிரமாக பரவியநேரத்தில் திருவண்ணாமலை கிரிவலம் தடைசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

District Collector thiruvannamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe