தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சார்ந்த திருநங்கை அபர்ணா. இவர் அரசு வேலை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சித்த நிலையில் இன்று அவர் கனவு நனவாகியிருக்கிறது.
அபர்ணா இன்று தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர்களை ஏற்றிசெல்லும் தானியங்கி வாகன ஓட்டுநர் பணி நியமனம் செய்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்பித்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இதன் தொடர்பாக பேசிய அபர்ணா, எங்களை போன்றவர்களுக்கு இந்த சமூகத்தில் நீண்ட காலமாக சில அவமதிப்பு வந்துள்ளது. அதை மாற்றுவதற்ககு பல அமைப்புகள் உள்ளன. அதில் எங்களை தொடர்ந்து அரசு பணிக்காக தேர்வு எழுதவும், படிக்கவும் ஊக்கம் கொடுத்தவர் கிரேஷ்பானு. இந்த பணி கிடைக்கவும் அவங்கதான் காரணம். அவர்களுக்கு நான் நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன். எங்களை மதித்து பணி வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி என்றார்.