Advertisment

சமத்துவபுரம் கட்டட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்! 

The district collector inspected Samathuvapuram construction works!

Advertisment

தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டி.பி.ராஜேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசுத் திட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மண்மங்கலம் பகுதியில் உள்ள சமத்துவபுரம் கட்டிடப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் உள்ள நிலையில், மீண்டும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று பயனாளிகள் சொந்த செலவில் பணிகள் முடிவடைந்து அதற்கான நிதியாக தலா ஒரு வீட்டிற்கு 50 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் அமைந்துள்ள 100 வீடுகளை கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டி.பி.ராஜேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

முன்னதாக தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளியணை கிராமத்தில் நூலக கட்டிடப் பணிகளையும், அதனைத் தொடர்ந்து வெள்ளியணை சமத்துவபுரம் கட்டிடப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டனர்.

karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe