Advertisment

கரூரில் 12 குவாரிகளுக்கு ரூ. 44 கோடி அபராதம்!

district collector has imposed a fine of Rs 44 crore on 12 quarries in Karur

கரூர் மாவட்டத்தில் தற்போது பட்டா நிலங்களில் உள்ள 78 சாதாரண கல்குவாரிகளுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள 3 கல்குவாரிகளுக்கும் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு நடப்பில் உள்ளது.இவற்றில் பட்டா நிலத்தில் வழங்கப்பட்ட 12 குவாரிகள் முறையான அனுமதி பெற்றிருந்தும் தற்போது இயக்கத்தில் இல்லை.புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்களின் ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

கரூர் மாவட்டத்தில் குத்தகை நடப்பில் உள்ள கல்குவாரிகளில் விதிமீறல்கள் ஏதும் நடைபெற்றுள்ளதா என்பதைக் கண்டறிய மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி இயக்குநர் (நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை), சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து42 குவாரிகளில் கூட்டுப் புலத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதில், கரூர் மாவட்டத்தில் உள்ள 12கல்குவாரிகளுக்கு ரூ. 44.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும், 30 கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் சிவாயம் அருகே உள்ள ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி கல்குவாரிக்கு ரூ. 23.54 கோடி மற்றும் அதே பகுதியில் உள்ள சிலம்பரசன் குவாரிக்கு ரூ. 8.61 கோடி, புன்னம் சத்திரத்தில் உள்ள விஎஸ்டி புளுமெட்டல்ஸ் குவாரிக்கு ரூ.1 கோடி 35 லட்சம், பவித்தரம் பகுதியில் உள்ள பாலா புளு மெட்டல்ஸ்க்கு ரூ. 6கோடி 46 லட்சம் என 12 கல்குவாரிகளுக்கு 44 கோடி 65 லட்சத்து 28,357 ரூபாய் அபராதம் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது என கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

quarry karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe