District Collector gave 2 crore education loan to students in Cuddalore

Advertisment

கடலூர் கிருஷ்ணசாமி பொறியில் கல்லூரியில் மாணவர்கள் தங்களது உயர்கல்வி கனவை அடைவதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக உள்ளதை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க மாணவர்களின் கல்விக் கனவை நினைவாக்கும் வகையில், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைபெற்றது.

அனைத்து கல்லூரிகள் மற்றும் வங்கிகளை ஒருங்கிணைத்து நடைபெற்ற இந்த கல்வி கடன் முகாமில், கலந்து கொண்டு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்கிட வங்கிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதில் ஸ்டேட் பாங்க், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச் டி எஃப் சி வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் பங்கேற்றன.மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்வதோடு முகாமில் பங்கேற்றுள்ள வங்கி அதிகாரிகளைநேரில் அணுகி தங்களுக்கானகல்விக்கடன் குறித்த முழு தகவல்களையும் அறிந்து கொண்டனர்.

இந்த முகாமில் கலந்து கொண்ட 67 மாணவர்களுக்கு 2 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் கல்விக்கடன் மற்றும் பல்வேறு திட்டங்களில் 39 பயனாளிகளுக்கு 5.42 கோடி மதிப்பீட்டில் தொழில் கடனும் மொத்தம் 106 பயனாளிகளுக்கு 7.56 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்கள்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கௌரி சங்கர் ராவ், முன்னோடி வங்கி மேலாளர் அசோக் ராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.