Published on 25/12/2021 | Edited on 25/12/2021

மதுரை மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்துள்ளார்.
மதுரையில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 13 அலுவலக உதவியாளர்கள், மூன்று இரவுக் காவலர்கள் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதேபோல் 15 ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளும் நிர்வாக காரணங்களுக்காக அறிவிக்கப்பட்ட நிலையில், அவை ரத்து செய்யப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.