ADVERTISEMENT

'ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா' - கண்ணீர் விட்டு அழுத மாவட்ட ஆட்சியர்

10:58 AM Oct 11, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற முதியவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் கண்ணீர் விட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 வயதைக் கடந்த முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி முதியோர் இல்லம் ஒன்றில் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கலந்து கொண்டார். முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வரும் நூறு வயதை கடந்த முதியவர்களுக்கு புத்தாடை மற்றும் சால்வை ஆகியவற்றை பரிசளித்த மாவட்ட ஆட்சியர், அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி நலம் விசாரித்தார்.

தொடர்ந்து முதியவர்கள் நடனமாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் 'ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா' என்ற பாட்டுக்கு முதியவர்கள் உற்சாகமாக நடனம் ஆடினர். அப்பொழுது அதனைப் பார்த்துக்கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் அருணா திடீரென கண்ணீர் விட்டு தேம்பித் தேம்பி அழுதார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மாவட்ட ஆட்சியரை சமாதானப்படுத்தித் தேற்றினர். இந்தச் சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT