District BJP sent the petition to the Chief Minister by post

Advertisment

பஞ்சப்பூரில் அமைந்துள்ள பசுமைப் பூங்காவை சீரமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வருக்குக் கோரிக்கை மனு தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைந்துள்ள பசுமைப் பூங்காவிற்கு எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரன் நகர் மற்றும் பஞ்சு ஆகிய பகுதிகளிலிருந்து பொதுமக்கள் காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியில் ஈடுபட வருவதுவழக்கம்.

கடந்த சில மாதங்களாக பூங்காவிற்கு அனுமதி வழங்காத நிலையில், பூங்காவில் உள்ள அனைத்துப் பொருட்களும் பழுதடைந்து, சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல், ராட்டினம் உள்ளிட்டவை பழுதடைந்து காணப்படுவதாகவும், சுற்றுச்சுவர், முள்வேலிகள் அனைத்தும் பழுதடைந்திருப்பதாகவும்,இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் திருச்சி மாவட்ட பாஜகவினர் சார்பாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவிடம் புகைப்படத்துடன் கூடிய கோரிக்கை மனுவை முன்வைத்துள்ளனர். மேலும், பஞ்சப்பூர் பசுமைப் பூங்காவை உடனடியாகச் சீரமைக்க வலியுறுத்தி தமிழ்நாடுமுதல்வருக்கு கோரிக்கை மனுவை தபாலில் அனுப்பியுள்ளனர்.