District Attorneys Meet to Protect Volunteers - Resolution at DMK Advisory Meeting

Advertisment

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.காணொலி காட்சி வாயிலானஇந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என 150 பேர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தொண்டர்களைபாதுகாக்க மாவட்ட வாரியாக வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வழக்கறிஞர்கள் குழுஅமைக்கப்படும், அரசின் அநீதியை தட்டிக் கேட்க,அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிட குழு அமைக்கப்படும். பாதிக்கப்படும் தொண்டர்களை அடக்குமுறையில் இருந்து பாதுகாக்க வழக்கறிஞர் குழு அமைக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேபோல் திமுக தோழர்கள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளை பொய் வழக்கு போட்டு கைது செய்வதா? என இந்த ஆலோசனை கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.