பண மோசடி புகாரில் அ.தி.மு.க. நிர்வாகி கைது!

District ADMK IT team leader arrested!

பண மோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கிய அ.தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பூங்கொடி கிராமத்தில் கடலூர் மாவட்ட அ.தி.மு.க. தொழில்நுட்ப அணித் தலைவரான புருஷோத்தமன், கடந்த ஆட்சியின் போது நீராதேவி என்பவரிடம் ஆவின் பாலகம் வைத்து தருவதாகக் கூறி ரூபாய் 1 லட்சம் மோசடி செய்ததாகவும் பணத்தைத் திருப்பிக் கேட்ட போது, நீராதேவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காவல்துறையிடம் புகார் அளிக்கபபட்டிருந்தது.

இதனை தவிர, வழிப்பறி செய்தது, மளிகை கடையில் பணம் கேட்டு மிரட்டியது என புருஷோத்தமன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு புகார்கள் அளிக்கபப்ட்டிருந்தது. இந்த நிலையில், புருஷோத்தமனை சிதம்பரம் தாலுகா காவல்துறையினர் பல்வேறு புகார்களின் அடிப்படையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

admk Leader police
இதையும் படியுங்கள்
Subscribe