Advertisment

சிதம்பரம் பகுதி நியாயவிலை கடைகளில் கெட்டுப்போன அரிசி, பூண்டு விநியோகம்!!!

 Distribution of spoiled rice and garlic in Chidambaram area fair shops

Advertisment

சிதம்பரம் பகுதி நியாயவிலை கடைகளில் கருப்பு நிறத்தில் கெட்டுப்போன அரிசி மற்றும் பூண்டு விநியோகம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து. வாங்க மறுத்து வருகிறார்கள்.

நியாயவிலை கடைகளில் தற்போது கரோனாகாலங்களில் பொதுமக்களுக்கு விலையில்லாமல் மத்திய, மாநில அரசு தொகுப்புகளில் இருந்து அரிசி வழங்கப்பட்டு வரப்படுகிறது. இந்தநிலையில் சிதம்பரம் பகுதியில் உள்ள அம்பலத்தாடி மடத்தெரு உள்ளிட்ட சுற்றுவட்ட பகுதியிலுள்ள நியாயவிலை கடைகளிலும் அரிசிகள் வழங்கப்பட்டு வந்தது. இதில் 30 சதவீதமானமூட்டைகளில் கருப்பு நிறத்தில் கெட்டுப்போன கல், மற்றும் மண் கலந்த அரிசி வந்துள்ளது. இதனை நியாயவிலை கடை பணியாளர்கள் பொதுமக்களிடம் வழங்கும்போது பொதுமக்கள் வாங்க மறுப்பு தெரிவித்து விற்பனையாளர்களிடம் சண்டையிடுகிறார்கள். இதனால் சிலகடைகளின் முன்பு பொதுமக்களின் இறைச்சல் சத்தம் அதிகமாகவே உள்ளது.

இதுகுறித்து தமிழநாடு நியாயவிலைகடைகள் பணியார் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா கூறுகையில், தற்போது கரோனாகாலங்களில் நியாயவிலை கடை பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள சானிடைசர், முககவசம் உள்ளிட்ட எந்த உபகரணமும் வழங்கவில்லை. குடும்ப அட்டைகளுக்கு தேவையான 100 சதமான பொருட்களை அரசு வழங்கவில்லை. இந்த நிலையில் அரிசி கருப்பு நிறத்தில் கெட்டுபோய் கல், மண் கலந்து வருகிறது.

Advertisment

கரோனா தடுப்பு காலங்களில் ரூ 500 மளிகை தொகுப்புகளை அரசு நியாயவிலை கடைகள் மூலம் விற்பனை செய்தது. அதில் உள்ள பூண்டுகள் கெட்டுபோய் அழுகிய நிலையில்இதனை பொதுமக்கள் வாங்க மறுக்கிறார்கள். நிர்வாகமோ இதனை திருப்பி வாங்கிகொள்ளவும் மறுக்கிறது. கரோனாகாலத்தில் உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்கு அதியாவாசிய சேவையை செய்து வரும் நியாவிலை கடை ஊழிர்களின் நிலமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Ration card chithambaram district corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe