Advertisment

பள்ளி மாணவர்களுக்கு கெட்டு போன முட்டைகள் விநியோகம்!

Distributed spoiled eggs to school children!

Advertisment

சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் கெட்டுப் போயிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், வாவிப்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சித் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்திற்கான 10 முட்டைகள், எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இதைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முட்டைகள் கெட்டுப் போய் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

அழுகிய முட்டை விநியோகம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்திவருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

students schools eggs
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe