/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-11_34.jpg)
திருச்சி தீரன்நகர் விஜயா நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமியின் மகன் கவுதம்(26). இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் அண்மையில் திடீரென வயிற்று வலி எனக்கூறி அவர் வேலை செய்யும் மருத்துவமனையிலேயே புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
கடந்த 21ஆம் தேதி கவுதமுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் அதே மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை(26.5.2024) உயிரிழந்தார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில் கவுதம் மருத்துவம் படிப்பின்போது உடன் பயின்ற ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் மன அழுத்தத்தில் இருந்து வந்திருக்கிறார். இதன் காரணமாகவே அவர் வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாகவும், இது தொடர்பாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் தான் அவர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)