Skip to main content

தொலைதூரக் கல்வியை மூன்று வருடத்திற்குள் முடிக்கவில்லை என்றால்... -அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் பேட்டி

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
vice chancellor

 

 

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொலைதூர கல்வி இயக்க வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் கலந்துகொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன், தொலைதூர கல்வி இயக்கக இயக்குனர் ராஜசேகரன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வநாராயணன் மற்றும் பலதுறை முதல்வர்கள், இணை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், துறை தலைவர்கள் என பல்கலைக்கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசன், “தொலைதூர கல்வி இயக்கக வாயிலாக இந்த கல்வியாண்டில் 242 பாடப்பிரிவுகள் நடத்தப்படவுள்ளன. இதில் முதுகலை பட்டப்படிப்பு 65, இளநிலை பட்டப்படிப்பு 66, முதுநிலை பட்டயப் படிப்பு 52, பட்டயப் படிப்பு 36 மற்றும் சான்றிதழ் படிப்புகள் 23 என நடத்தப்படவுள்ளது.  

 

முதல் பருவத்தேர்வு முறை தொடங்கப்பட்டு அனைத்து முதுநிலை மற்றும் இளநிலை பாடப்பிரிவுகள் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நடத்தப்பட்டுவரும் பாடங்கள் அனைத்தும் இணையதளத்தின் வாயிலாக நடத்தப்படுகின்றன.

 

இந்த கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை இலக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அவர்களின் முதுநிலை, இளநிலை பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்பு உள்ளிட்டவைகளை மூன்று வருடத்திற்குள் முடித்துவிடவேண்டும்.  இல்லையெனில் அவர்களது பதிவு எண் தானாக நீக்கப்பட்டுவிடும். அதன்பிறகு மாணவர்கள் மீண்டும் படிப்பை தொடர வேண்டும் என்றார்.

 

கல்வி கட்டணங்கள் அனைத்தும் இணையதளம் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மாணவர்களுக்கு சந்தேகம் என்றால் பல்கலைக்கழக இணையதளம் மூலம் அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்