தி.மு.க பொருளாளர் துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில்உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது இது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ''பதவியை எதிர்பார்த்து தி.மு.க.விற்கு வரவில்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு தி.மு.க.வில் கலகம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. பதவிகள் கிடைக்காவிட்டாலும் திமுகவின் அடிமட்ட தொண்டனாக இருந்து கோஷமிடுவேன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்'' எனவும் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.