தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகள் மீது அதிருப்தி இருப்பதாக கட்சியின் மாவட்ட தலைவர்கள் பலர் டெல்லியில் முகாமிட்டு தங்களுடைய புகாரை தெரிவித்துள்ளனர்.
இருபதுக்கு மேற்பட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி கொண்டு அதுகுறித்து புகார் தெரிவிப்பதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். முன்னதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடாங்கரை சந்தித்து, செல்வப்பெருந்தகை பல விஷயங்கள் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மீது வைத்துள்ளதாகவும்தகவல்கள் வெளியாகி இருக்கிறது.