நெல்லையில் கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் இருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கோவில் கொடை விழாவில் இருதரப்பிற்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் சகோதரர்களான மதியழகன், மதிராஜா ஆகியோர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தாக்குதலில் படுகாயம் அடைந்த மகேஸ்வரன் என்பவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கொலையில் தொடர்புடைய பருன், ராஜ் குமார், விபின் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோவில் கொடையில் ஏற்பட்ட தகராறில் இருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.