Skip to main content

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரிடம் தகராறு; கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

There is no need for reservation for Adi Dravidas in the panchayat

 

காந்தி பிறந்த நாளான நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதே போல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பாளைய ஏகாம்பர நல்லூரில் நடந்த கிராம சபை கூட்டம் நடந்தது. இங்கு ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள சித்ரா ஏழுமலை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார்.

 

கூட்டம் நடந்த பொழுது அங்கு குடி போதையில் வந்த சிலர் கூட்டத்தை நடத்த விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த சித்ரா ஏழுமலை, “நான் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த பெண். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கூட்டத்தை கூட்டினோம். அதில் கவுன்சிலரின் ஆட்கள் சிலர் குடித்துவிட்டு வந்து பிரச்சனை செய்தனர். கூட்டத்தையும் நடத்தவிடாமல் செய்தனர். பணிசெய்ய விடாமல் தடுத்ததால் ஊராட்சியில் ஆதி திராவிடர்களுக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை ” எனக் கூறினார்.

 

சித்ரா ஏழுமலையின் கணவர் கூறுகையில், “என் மனைவி வெற்றி பெற்று இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எந்த ஒரு திட்டத்தையும் செய்ய விடாமல் தடுக்கிறார்கள். என்னை கேட்காமல் எதையும் செய்யக்கூடாது என கவுன்சிலர் கூறுகிறார். அவர் டாஸ்மாக் மேற்பார்வையாளர். இன்று நடந்த கூட்டத்தில் கவுன்சிலரின் ஆட்கள் மது குடித்துவிட்டு வந்து கூட்டத்தில் பிரச்சனை செய்து கூட்டத்தையும் நடத்த விடாமல் செய்து விட்டனர். மனைவி காவல் துறைக்கு தகவல் கொடுத்ததால் காவல் துறையின் பாதுகாப்புடன் நாங்கள் வீட்டிற்கு வந்தோம்” எனக் கூறினார்.

 

பட்டியல் சாதி என்பதாலேயே என்னால் எந்த ஒரு பணியையும் செய்ய முடிவதில்லை என்றும் சாதிய  ரீதியாக பாகுபாடு காட்டி மிரட்டுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்ரா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

'ஆன்மீக நகரமா? கஞ்சா நகரமா?'- நெரிசலில் ஊடுருவும் போதை வஸ்துக்கள்

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
 'Spiritual City? Ganja City?'- Narcotics seeping into the traffic

திருவண்ணாமலை நகரத்தில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக கஞ்சா கிடைக்கிறது, பள்ளி மாணவர்களுக்கே சுலமாக கிடைக்கும் நிலையிலேயே உள்ளது. இதனைத் தடுக்க வேண்டிய காவல்துறை தடுப்பதில் எந்த முயற்சியும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை நகர மன்ற கூட்டத்திலேயே கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் கஞ்சா குடிப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள் எங்கள் பகுதிகளில் கஞ்சா விற்கிறார்கள் என குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். அதன் பின்பும் நடவடிக்கை எடுக்கவில்லை. கிரிவலப் பாதையில் உள்ள சாமியார்களிடமும் கஞ்சா பழக்கம் அதீதமாக உள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்தார்கள் என சமுத்திரம் காலணி பிரவீன்குமார், விக்னேஷ், காட்டு மலையனூர் சந்துரு ஆகிய மூவரை கைது செய்துள்ளது திருவண்ணாமலை நகரக் காவல் துறை. அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். 

இவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள இவர்களை விட பெரிய பெரிய கேங்க் எல்லாம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி காவல்துறை, பாண்டிச்சேரிக்கு திருவண்ணாமலையிலிருந்தே கஞ்சா வருகிறது என குற்றம் சாட்டியது.திருவண்ணாமலைக்கு ஆந்திராவிலிருந்து  கஞ்சா வருகிறது. இங்கிருந்து பல இடங்களுக்கு செல்வதாக அப்போதே பாண்டிச்சேரி காவல்துறை சார்பில் கூறப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையாரை கோவிலை தரிசிப்பதற்காக கிரிவலம் வருவதற்காக ஆந்திரா தெலுங்கானாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அந்த கூட்டத்தோடு கஞ்சா கடத்தல் கும்பல்களும் சேர்ந்து வந்து விடுகின்றன. அன்றைய தினம் காவல்துறையின் வாகன சோதனை எதுவும் இருக்காது என்பதால் கஞ்சாவைக் கொண்டு வந்து இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு அனுப்புகிறார்கள் என்கிறார்கள்.

ஆன்மீக நகரம் என்பது வருங்காலத்தில் கஞ்சா நகரம் என பெயர் மாற்றம் அடைவதற்கு முன்பு காவல்துறை கஞ்சா கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.