சேலத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டட தொழிலாளியை கழுத்தை அறுத்துக் கொலை செய்து, சடலத்தை கிணற்றில் வீசிச்சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

Advertisment

murder

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் மதுசூதனன். கட்டடத் தொழிலாளி. நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 20, 2018) இரவு முதல் வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து அவருடைய தாயார் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். உதவி போலீஸ் கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், சேலம் பெருமாள் மலை அடிவாரத்தில் காட்டுப்பகுதியில் இருக்கும் ஒரு கிணற்றில் வாலிபர் ஒருவரின் சடலம் மிதப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சூரமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சடலத்தை மீட்டனர். அது, மாயமானதாக புகார் கூறப்பட்ட மதுசூதனன்தான் என்பது தெரிய வந்தது.

மதுசூதனனை கழுத்தை அறுத்துக்கொலை செய்த மர்ம நபர்கள், பின்னர் சடலத்தை கை, கால்களை கட்டி கிணற்றில் வீசி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுசூதனனுக்கும், ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த வசந்த், தட்சணாமூர்த்தி ஆகியோருக்கும் கடந்த வாரம் மது அருந்தும்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபம் அடைந்த மதுசூதனன், அவர்கள் இருவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டிவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

Advertisment

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரும் மதுசூதனனை சந்தித்து சமாதானம் பேசியுள்ளனர். பின்னர் அவரை மது குடிக்கலாம் எனக்கூறி அ-ழைத்துச் சென்றுள்ளனர். குடிபோதையில் இருந்த மதுசூதனனை அவர்கள் இருவரும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த பின்னர், கை, கால்களை கட்டி கிணற்றுக்குள் தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள வசந்த், தட்சணாமூர்த்தி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.