/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1252_0.jpg)
சேலத்தில் பாதையை பயன்படுத்துவது தொடர்பான தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள ஒருத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நிலத்தை ஒட்டிய பொதுப்பாதையில் மரக்கன்றுகளை வைத்த பொழுதும் வாகனங்களை கொண்டு செல்லும் பொழுதும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது சுப்பிரமணி முருகனை தாக்கியதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் இறந்த இளைஞர் முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணையானது நடைபெற்ற நிலையில் இளைஞரை கொலை செய்த சுப்பிரமணியனை போலீசார் கைது செய்துள்ளனர். பொதுப்பாதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டி பகலிலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)