Dispute caused by Digital Banner; Police build up

டிஜிட்டல் பேனரால் ஏற்பட்ட தகராறில் கோவில் பண்டிகை கலவரக்காடான சம்பவம் கரூரில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கரூர் மாவட்டம் குளித்தலை பொய்யாமணி அம்பேத்கர் நகரில் காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த பன்னிரண்டாம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் குறிப்பிட்ட இடங்களில் வரவேற்பு அளிக்கும் வகையில் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர். அந்த டிஜிட்டல் பேனரை மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கிழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது.

Advertisment

இதில் இரண்டு தரப்பு மோதி கொண்ட நிலையில் நான்கு பேர் காயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சாரார் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் அதிகப்படியான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.