Dispute between husband and wife; Police investigation

மதுரையில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

மதுரை மாவட்டம் புளியம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர்கள் இருளப்பன் - பாக்கியம் தம்பதி. வயது முதிர்ந்த தம்பதிகளான இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூவருக்கும் திருமணம் செய்து முடித்தனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒரே வீட்டில் தனித் தனியான அறைகளில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறுஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் இருந்த அரிவாளால் இருளப்பன் தனதுமனைவி பாக்கியத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் தான் வெட்டியதால் மனைவி இறந்துவிட்டார் என நினைத்த இருளப்பன், போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள், சிறையில் அடைப்பார்கள் என்ற பயத்தில் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வில்லூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.