உணவு டெலிவரி பேக்கில் கத்தி; பட்டப் பகலில் நடந்த பயங்கர தாக்குதல்

Dispute between food delivery man and driver: Tragedy in Chidambaram

சிதம்பரத்தில் சோமாடோ நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்பவருக்கும் தனியார் மினி வேன் ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில்,சோமாடோ உணவு டெலிவரி இளைஞர் கத்தியால் தாக்கிய பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உணவு டெலிவரி செய்ய வந்த நபருக்கும் அங்கிருந்த தனியார் மினி வேன் ஓட்டுநருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத்தாக்கிக் கொண்டனர். அப்பொழுது சோமாடோ ஊழியர் தன்னுடைய உணவு டெலிவரி பேக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யாரும் எதிர்பாராத நேரத்தில் மினி வேன் டிரைவரை கொடூரமாகத்தாக்கினார். பட்டப் பகலில் நடு சாலையில் கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

incident zomato
இதையும் படியுங்கள்
Subscribe