Advertisment

நுங்கு விற்றதில் தகராறு - நண்பரின் தலையை சீவித்தள்ளிய வாலிபர்!

murder

சொற்ப பணம் ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்காக நண்பரின் தலையையே கொய்து, தலை வேறு உடல் வேறாக்கி சிவகங்கை நகர காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் கொலையாளி ஒருவர்.

Advertisment

கிராமத்தில் கிடைக்கும் நுங்குகளை நகர்புறத்தில் கொண்டு வந்து விற்பனை செய்வது வேலையில்லாத வாலிபர்களின் கோடை கால தொழில்களுள் ஒன்று. இந்த கோடையிலும், நுங்கு விற்கும் வேலை சிவகங்கை காமராஜர் சாலையைச் சேர்ந்த முத்துப்பாண்டியனையும், அருகிலுள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த பூமிநாதனையும் பார்ட்னராக்க இருவரும் சேர்ந்து சிவகங்கை நகர் காவல் நிலைய வரம்பிற்குட்பட்ட வாரச்சந்தை அருகில் கடந்த ஒரு வாரமாக நுங்கு விற்பனைத் தொழிலை கவனித்து வந்தனர்.

Advertisment

murder

இவ்வேளையில், முத்துப்பாண்டி நேற்று விற்பனையான தொகை ரூ.1500ஐ எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இன்று விற்பனை முடிந்ததும் அருகிலுள்ள டாஸ்மாக்கில் இருவரும் சேர்ந்து மதுகுடித்துக் கொண்டிருக்கும் போது ரூ.1500 விவகாரத்தை பூமிநாதன் கிளற, வாய் வார்த்தை முற்றலாகிய நிலையில் மது மயக்கத்திலிருந்த முத்துப்பாண்டியின் தலையை நுங்கு சீவுவது போல் சீவித்தள்ளினார் பூமி நாதன். உடல் வேறு, தலை வேறு என்றான நிலையில் தலையை கையில் எடுத்துக்கொண்டு சிவகங்கை நகர் காவல் நிலையம் அருகே கொண்டு செல்கையில் போலீசார் பூமி நாதனை கைது செய்தனர்.

murder3

சொற்ப பணம் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்க்காக நண்பரின் தலையையே கொய்தது சிவகங்கையில் மிகுந்த பரப்பரப்பினை உண்டாக்கியுள்ளது.

sold out money amount Dispute
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe