dispose of human waste by hand; Shocking video

Advertisment

தேனி பெரியகுளம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை கழிவுகளை துப்புரவுப் பணியாளர்களேவெறும் கையால் அப்புறப்படுத்தும் அதிர்ச்சி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளது. அனைத்து வார்டுகளில் இருந்து வெளியேறும் மனித கழிவுகள் நகராட்சிக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீரை சுற்றிக்கரிக்கும் உந்து நிலைத்தின் கிணற்றில் அடைப்பு ஏற்பட்டது. அடைப்புகளைநீக்குவதற்காக துப்புரவுப் பணியாளர்கள் கிணற்றுக்குள் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

வெறும் கைகளாலே மனிதக்கழிவுகளை அள்ளி அகற்றியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 2013 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட விதியின் படி மனிதக் கழிவுகளை மனிதனே தன் கைகளால் அப்புறப்படுத்துவது என்பது தடை செய்யப்பட்ட நிலையில், இந்த செயல் பெரும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. துப்புரவு பணியாளர்களை மனித கழிவுகளை அல்ல பயன்படுத்திய நகராட்சி நிர்வாகத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெரியகுளம்நகராட்சி சார்பில் 'குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.