கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் 9-க்கும் மேற்பட்ட தீர்த்தகுளங்கள் உள்ளது. இந்த குளங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் அதனை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நீதிமன்றமும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது.

Advertisment

Disposal of Occupied Housing in Chidambaram Gnanapragasa Pond.. Request CPM!

இந்தநிலையில் சிதம்பரம் நகரத்தின் முக்கிய குளமாக கருதப்படும் ஞானபிரகாசம் குளத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் குளக்கரைகள் முழுவதும் வீடுகள் கட்டிகொண்டு கழிவுகளை குளத்தில் விட்டுவருகிறார்கள். இதனால் குளம் அசுத்தம் அடைந்தது மட்டுமில்லாமல் வண்டல் மண் அதிகமாகி குளம் துர்ந்துள்ளது. என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தநிலையில் குளத்தை தூர்வாரும் பணியில் சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா தலைமையில் நகராட்சி ஊழியர்கள், வருவாய்துறையினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனவரும் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து அப்பகுதியில் குடியிருக்கும் 62 குடும்பத்திற்கு ஏற்கனவே கொடுத்த நோட்டிஸின் அடிப்படையில் செவ்வாய் கிழமையன்று குளத்தை சுற்றியுள்ள வீடுகளை பொக்ளின் இயந்திரம் கொண்டு இடித்து அகற்றினர். வீடுகளை அகற்றும் போது பிரச்சனைகள் வராமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisment

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜா கூறுகையில், இந்த பகுதியில் வசித்த மக்கள் தினகூலி தொழிலாளர்கள் இவர்கள் தற்போது வாழ்வாதரம் இழந்துள்ளனர். இவர்களுக்கு விரைவில் வீடுகட்டிகொடுக்கவேண்டும் என்றார்.

சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன் கூறுகையில் ஆக்கிரமிப்பு வீடுகளை இழந்தவர்களுக்கு மூன்று மாதத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ10 லட்சத்தில் வீடு கட்டிகொடுக்கப்படும். இதில் பய பயனாளிகள்ரூ 1 லட்சம் கொடுக்கவேண்டும். மீதி 9 லட்சம் அரசின் நிதி. இதுகுறித்து அவர்களுக்கு அதிகாரபூர்வ கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகட்டுவதற்கான இடங்களை தேர்வு செய்துள்ளோம் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றார்.