Advertisment

குறைந்தபட்ச ஊதியம் வேண்டி போராடியவர்கள் பணி நீக்கம்... கண்டித்து சி.ஐ.டி.யு போராட்டம்!

Advertisment

சென்னையில் குறைந்தபட்ச ஊதியம் கேட்டு போராடிய தூய்மைப் பணியாளர்கள்வேலையை விட்டு நீக்கப்பட்டதைக் கண்டித்துப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் இன்று சி.ஐ.டி.யு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யு தலைவர் எஸ்.கே.மகேந்திரன்,“சென்னை மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு தலா 624 ரூபாயை ஒரு நாள் சம்பளமாகக்கொடுக்க வேண்டும். ஆனால் மாநகராட்சி ரூ.379 மட்டுமே தருகிறது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இதில் 291 தொழிலாளர்கள் வேலையைவிட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதனைக் கண்டித்து இப்போராட்டம் நடைபெறுகிறது.” என்று தெரிவித்தார்.

CITU
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe