Advertisment

பாலியல் பாடம் நடத்தியதாக ஆசிரியர் பணியிடை நீக்கம்

Dismissal of the teacher who conducted the lesson in such a way that his face turned ugly

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆபாச பாடம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

அரசு மேல் நிலைப் பள்ளியில் கணக்கியல் பிரிவு ஆசிரியராக பணியாற்றிய கிறிஸ்துதாஸ் மாணவர்களுக்கு ஆபாசமாக பாடம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர்.

Advertisment

அதன் அடிப்படையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் போக்சோ உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே கிறிஸ்துதாஸ் மீதான போக்சோ வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி குமரி மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

teacher POCSO
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe