அரசின் உத்தரவை மீறி, விடுமுறை நாளில் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தியதாக தலைமையாசிரியா்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 Dismissal of Headmaster in cuddalore

இந்நிலையில் கடலூா் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், ஆயிபுரத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவா்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகளை தலைமையாசிரியா் சுரேஷ்குமார் நடத்தியுள்ளார் என கடலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.ரோஸ்நிர்மலாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவா் நடத்திய விசாரணையில், சிறப்பு வகுப்பு நடத்தியது உண்மை என தெரியவந்ததால் சுரேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.