Skip to main content

"பணி மற்றும் பதவி உயர்வுக்காக மதம் மாறினால் பணிநீக்கம்" - நீதிமன்றம் அதிரடி!

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

 Dismissal for conversion for work and promotion - Court Action

 

பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டில் பணி பெறுவதற்காக மதம் மாறியிருந்தால் உடனடியாக வேலை நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

கோவை பாரதியார் பல்கலைக்கழக பணியாளராக பணியமர்த்தப்பட்ட கவுதமன் என்பவருக்கு தகுதி இல்லாத நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும்,  இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. உரிய கல்வி தகுதியை ஆராயாமல், முறையாக விசாரணை செய்யாமல் பணி நியமனம் வழங்கப்பட்டது தவறு. அதேபோல் பதவி உயர்வு வழங்கியதும் தவறு என கூறிய நீதிமன்றம், பதவி உயர்வு வழங்கியதற்கான உத்தரவை ரத்து செய்ததுடன் அவருக்கு பாதி ஊதியத்திற்கான ஓய்வூதியத்தை மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. 

 

குறிப்பாக பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பணி நியமனம் செய்யும் பொழுது வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும். அதேபோல் பணி நியமனத்திற்கான நேர்காணலுக்கு முன்பு விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி ஆகியவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும். மேலும், இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் பெறுவதற்காக அல்லது பதவி உயர்வு பெறுவதற்காக மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் பணி நியமனத்தை ரத்து செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்