Advertisment

கரோனாவைக் கட்டுப்படுத்த களமிறங்கிய ரோபோ..! (படங்கள்)

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (20/05/2020) இரவு 07.00 மணி நிலவரப்படி, தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் 8,228 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

சென்னையில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக, கரோனா பாத்தித்த பகுதிகள் மட்டும் அல்லாமல் நகரின் பல முக்கியச் சாலைகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. தற்போது, கிருமிநாசினி தெளிப்பதற்காகவே பிரத்யேக ரோபோவை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை, பி.என்.ஆர் கார்டன் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரோபோவின் கிருமிநாசினி தெளிக்கும் பணியைத் துவங்கிவைத்தனர்.

Advertisment

Robo Chennai corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe