





இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்துவருகிறது. அதேவேளையில் ஆக்ஸிஜன் தட்டுபாடும் இந்த இரண்டாம் அலையில் பெரும் பிரச்சனையாக இருந்துவருகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவ ஆரம்பித்ததும் அரசு, கல்லூரி விடுதிகளை கரோனா சிகிச்சை மையமாக மாற்றி கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்துவந்தது. அதன்பிற்கு கரோனா பரவல் சற்று குறைந்ததும் மருத்துவமனைகளில் மட்டும் கரோனா பாதித்தவர்களுக்கான மருத்துவம் பார்க்கப்பட்டுவந்தது.
இந்தநிலையில் தற்போது கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகமாக உள்ளதால் மீண்டும் கல்லூரி விடுதிகளை கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு முகாமாக மாற்றியுள்ளது. அதன்படி சென்னை, திருவல்லிக்கேணி, பாரதி சாலையில் உள்ள விக்டோரியா ஹால் மாணவர் விடுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வளாகத்தை மாநகராட்சி ஊழியர் ஒருவர், அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மை படுத்தினார்.