தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிவதோடு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உடன் பயணித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் கண்டறிந்து, அவர்களையும் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. மேலும், அவர்கள் வசிக்கும் பகுதிகளையும் முடக்கி, அப்பகுதி முழுவதையும் கிருமி நாசினிக் கொண்டு சுத்தப்படுத்தும் பணியையும் அரசு செய்து வருகிறது.
அந்தவகையில், இன்று (13.04.2020) சென்னை, புதுப்பேட்டை பகுதியில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அப்பகுதி முழுவதும் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.