சோழவரம் சுங்க சாவடியில் ஏற்பட்ட கைகலப்பில் வடநாட்டு நபரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

attack

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

விஷால் என்ற வடநாட்டவர் காரில்தனது குடும்பத்துடன்சென்னையைநோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்பொழுதுதிருவள்ளூர் சோழவரம் சுங்க சாவடியில் சுங்க கட்டணம் செலுத்த சொன்னதால்அங்கு உள்ள சுங்கச்சாவடிஊழியரிடம் விஷால்வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.ஏற்கனவே உள்ளூர் பிரமுகர்களின் கார்களுக்கு சுங்க கட்டணம் அங்கு வசூலிக்க படாதிருக்கும் சூழலில் தானும் உள்ளூர் தான் எனவே சுங்க கட்டணம் செலுத்தமாட்டேன் என விஷால் கூறியுள்ளதாக தெரிகிறது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குண்டர்கள் விஷாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றி இறுதியில் விஷாலை அங்குள்ள ஊழியர்கள் மற்றும் சில நபர்கள் சரமாரியாக தாக்கி சாலையில் வந்துகொண்டிருந்த பேருந்து மீது அவரை தள்ளிவிட்டு வெறிகொண்டுதாக்கினர். அவரை தாக்கிய காட்சிகளை காரில் இருந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் வீடியோவாக பதிவுசெய்துள்ளனர்.

இந்த தாக்குதலால் அங்கு சற்று பரபரப்பு கூடியது.