Advertisment

புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் மீண்டும் ஒரு கல்மரம் கண்டெடுப்பு!

Discovery of a stone again in the Pudukkottai Narimedu area!

புதுக்கோட்டை மாவட்டம் தொல்லியல் சின்னங்கள் நிறைந்த இடமாக உள்ளது. தற்போது வேப்பங்குடி ஊராட்சியில்பொற்பனைக்கோட்டைகிராமத்தில் 1.62 கி மீ சுற்றளவுள்ள சங்ககால கோட்டைக்குள் அகழாய்வு செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் சார்பில் உயர்நீதிமன்றம்மதுரைக்கிளையில்வழக்கு தொடர்ந்து அகழாய்வுக்கு உத்தரவு பெற்ற நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அகழாய்வு செய்ய மத்திய தொல்லியல்துறை அனுமதி அளித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதியோடு அகழாய்வு இயக்குநராக முனைவர் இனியன் குழுவினர் அகழாய்வுபணிகளைச்செய்து வருகின்றனர். அகழாய்வுப் பணிகளை அமைச்சர்மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதாராமுஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Advertisment

முதல்கட்டமாக அரண்மனை திடலுக்கு வடகிழக்கு பகுதியில்நீர்வாவிகுளத்திற்கு வடக்குப் பகுதியில் விவசாயி கருப்பையாவின் நிலத்தில் அகழாய்வு நடந்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 2016 ம் ஆண்டு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் புதுக்கோட்டைநரிமேடுபகுதியில் ஒருகல்மரம்கண்டெடுக்கப்பட்டு புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்தகல்மரம்கடந்த மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் தற்போது தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்ற புதுகை பாண்டியன் மீண்டும்நரிமேடுபகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட போது அங்கே மேலும் ஒருகல்மரம்கண்டெடுத்துள்ளார். கண்டெடுக்கப்பட்டகல்மரம்பொற்பனைக்கோட்டைஅகழாய்வு இயக்குநர் இனியனிடம் ஒப்படைத்துள்ளார். இந்தகல்மரம்மண்ணியல்ஆய்வுக்குப்பிறகு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நரிமேடுபகுதியில் அடுத்தடுத்துகல்மரங்கள்கிடைத்து வருவதால் ஆய்வாளர்களின் பார்வைநரிமேடுபக்கம் திரும்பியுள்ளது.

archealogist history Pudukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe