தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடுபோன ரூபாய் 40 கோடி மதிப்பிலான பழமை வாய்ந்த உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மாமல்லப்புரத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ஆபட்ரா என்பவரது கடையில் சிலைக் கடத்தல் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்குள்ள ரகசிய அறையில் சிவன், பார்வதி, நடராஜர், பெருமாள், கிருஷ்ணர், ராவணன் உள்ளிட்ட 11 சிலைகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக, சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.