Advertisment

நண்பர்களுடன் குளித்த போது நடந்த விபரீதம்! 

Disaster while bathing with friends!

Advertisment

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த தண்டாயுதபாணி என்பவரின் மகன் அரவிந்த் குமார் (17). இவர், தனது நண்பர்கள் மூன்று பேருடன் வண்ணத்துப்பூச்சி பூங்காவை சுற்றி பார்க்க சென்றுள்ளார். பின்னர் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் இருவர் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால், ஒருவரை மட்டுமே மீட்க முடிந்தது. இதில் அரவிந்த் குமாரை மீட்க முடியவில்லை. இதுகுறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் காவிரி ஆற்றிற்குள் அரவிந்த் குமாரை தேடினர். சுமார் ஒரு மணி நேர தேடலுக்கு பின்னர் அரவிந்த் குமாரின் உயிரற்ற சடலம் மீட்கப்பட்டது. ஸ்ரீரங்கம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe