Disappointment at not being enjoy crackers  due to rain ...!

தமிழகத்தின் எட்டு மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம். இந்த நிலையில் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் அதே நேரத்தில் புறநகர்ப் பகுதிகளான சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், பர்கூர், கோபிசெட்டிபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

Advertisment

ஈரோடு மாநகர்ப் பகுதியில் மட்டும் மழை பெய்யாமல் போக்குக் காட்டி வந்தது. இந்த நிலையில் இன்று 13ஆம் தேதி காலை முதலே வானம் திடீரென கரு மேகத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து முற்பகலிலிருந்து லேசான தூரல் மழை தொடங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

Advertisment

இந்தத் திடீர் மழையால், கடை வீதிகளில் தீபாவளிக்காகப் பொருட்கள் வாங்க வந்த மக்கள் நனைந்தபடி சென்றனர். தொடர்ந்து தூரல் மழையும் சில இடங்களில் மிதமான கன மழையும் பெய்தது.

மழை காரணமாக பட்டாசு விற்பனை குறைந்தது. சிறுவர் சிறுமியர், இளைஞர்கள் மழையால் பட்டாசு வெடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisment